News December 24, 2024
BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம்

5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மிசோரம் ஆளுநராக வி.கே. சிங், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News July 7, 2025
அஜித்குமார் மரண வழக்கு: சிபிஐக்கு மாற்றம்

அஜித்குமார் மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி CM ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில், அது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கில் 5 காவல்துறையினர் மீது குற்றம்சாட்டப்பட்டு உள்ளதால் வழக்கை சரியான திசையில் விசாரிக்க சிபிஐக்கு விசாரணையை மாற்றுவதாக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். விரைவில் இந்த வழக்கை CBI விசாரித்து, குற்றப்பத்திரிக்கையை தாக்குல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியாயம் கிடைக்குமா?
News July 7, 2025
பாஜக தேசியத் தலைவர் யார்?.. லிஸ்ட்டில் முந்தும் இருவர்!

பாஜக தேசியத் தலைவரின் பதவிக் காலம் முடிவடைந்து சுமார் ஓராண்டு ஆகிறது. புதிய தலைவரை நியமிப்பதில் ஆர்.எஸ்.எஸ் தலையீடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான், மனோகர் லால் கட்டார் ஆகியோரில் ஒருவரை நியமிக்க பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில், பெண் தலைவர் ஒருவரை நியமனம் செய்ய பாஜக திட்டமிட்டு வருவதாகவும் டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகின்றன. சீக்கிரம் அறிவிப்பு வரலாம்.
News July 7, 2025
துபாயில் செட்டிலாகணுமா..? இதுதான் சூப்பர் சான்ஸ்

இனி ₹23 லட்சம் செலுத்தினால் இந்தியர்கள் கோல்டன் விசா வழங்கப்படும் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. முன்னதாக, விசா பெற ₹4.66 கோடி மதிப்புள்ள சொத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் முதல் 3 மாதங்களிலேயே 5,000-க்கும் அதிகமான இந்தியர்கள் விசாவிற்காக விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.