News December 26, 2025
BREAKING: பிள்ளையார்பட்டி முறைகேடு; கோர்ட் அதிரடி.!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் நகை முறைகேடு வழக்கில், விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அறக்கட்டளை கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரனை நியமித்து மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சிவஞானம் கொண்ட ஆணையம், ஜனவரி 30க்குள் விசாரணை குறித்த இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்க மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 27, 2025
சிவகங்கை: இலவச தையல் மிஷின்.. APPLY பண்ணுங்க!

சிவகங்கையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலரை அனுகலாம்.
News December 27, 2025
சிவகங்கை: டூவீலர் விபத்தில் இளம் பெண் பரிதாப பலி

திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள சாமந்தப்பட்டியைச் சோ்ந்த சின்னக்கருப்பன் மகள் திவ்யா (21). இவா், தனது பெரியம்மா மகன் ரஞ்சித்துடன் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மாவடிக்கண்மாய் அருகே இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் திவ்யா பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். போலீசார் விசாரிக்கின்றனர்
News December 27, 2025
சிவகங்கை: ரேஷன் கார்ட் இருக்கா.. கலெக்டர் அறிவிப்பு

மத்திய அரசின் உத்தரவின்படி, அனைத்து AAY, PHH வகை ரேஷன் அட்டைதாரர்களும் வரும் டிச.31-ம் தேதிக்குள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு (e-KYC) செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.ரேஷனர் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க


