News January 30, 2026

BREAKING: பிப்.5-ல் அமைச்சரவைக் கூட்டம்

image

CM ஸ்டாலின் தலைமையில் வரும் 5-ம் தேதி அமைச்சரவைக் கூடுகிறது. பிற்பகல் 12 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.

Similar News

News February 7, 2026

திமுகதான் குழு அமைக்கல: கார்த்தி சிதம்பரம்

image

திமுக – காங்., தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியுடன் கனிமொழி பேசி 6 நாள்கள் ஆன பின்னும் இன்னும் திமுக பேச்சுவார்த்தை குழு அமைக்கவில்லை என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தங்கள் பக்கம் குழு தயாராக இருப்பதாக கூறிய அவர், குழு அமைக்காமல் திமுகவே தாமதிக்கிறது என்றார். முன்னதாக, தொகுதிகள் பற்றி பேச்சுவார்த்தை குழு பேசும் என கனிமொழி கூறியிருந்தார்.

News February 7, 2026

ஆயுளை நீட்டிக்கும் அவரைக்காயின் குணங்கள்!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி, ➤அவரைக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்த அணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது ➤அவரை விதைகளை வேக வைத்து சாப்பிட்டால், வாயு தொல்லை நீங்குவதோடு வயிற்று புண்ணையும் ஆற்றும் ➤அவரைக்காயில் உள்ள கால்சியம் எலும்புகள் & பற்களுக்கு வலு சேர்க்கிறது ➤நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை & கொலஸ்ட்ரால் அளவுகளை கட்டுப்படுத்துகிறது.

News February 7, 2026

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. கடைசி நேரத்தில் அறிவிப்பு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று(பிப்.7) விடுமுறை என அம்மாவட்ட CEO அறிவித்துள்ளார். முன்னதாக மழை விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக இன்றைய தினம் வியாழக்கிழமை கால அட்டவணையின்படி பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக <<19068555>>திருவாரூர், புதுக்கோட்டையில்<<>> இன்று பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!