News March 25, 2026
BREAKING: பாமக போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல்

அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிடும் 18 தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ➤சேலம் மேற்கு, ➤சேலம் வடக்கு, ➤தருமபுரி, ➤பென்னாகரம், ➤சோளிங்கர், ➤காட்டுமன்னார்கோவில்(தனி), ➤மயிலாடுதுறை, ➤விக்கிரவாண்டி, ➤அம்பத்தூர், ➤திருப்போரூர், ➤உத்திரமேரூர், ➤போளூர், ➤விருத்தாசலம், ➤ஜெயங்கொண்டம், ➤ரிஷிவந்தியம், ➤செஞ்சி, ➤பெரம்பூர், ➤கீழ்வேளூர்(தனி) தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. <<-se>>#TNElection2026<<>>
Similar News
News April 5, 2026
தேர்தல் பணிகள் தொடர்பாக புதிய காவல் ஆணையர் அதிரடி ஆய்வு

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மதுரை மாநகரில் தேர்தல் அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யப் புதிய காவல் ஆணையர் அபிஷேக் தீக்சித் இன்று (ஏப்.04) அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றி சுதந்திரமாக வாக்களிக்க ஏதுவாக, பல்வேறு வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களுக்கு நேரில் சென்ற அவர், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார்.
News April 5, 2026
சுயேச்சையாக களமிறங்கும் அஸ்வத்தாமன்?

பண்டிருட்டி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், சுழன்று சுழன்று தேர்தல் பணிகளை செய்து வந்தார். அவர், பண்ருட்டி அல்லது தி.மலையில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் பாஜக வேட்பாளர் பட்டியலில் அவரின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 5, 2026
ஒடிசாவில் SC, ST பிரிவினருக்கு 2 மடங்கான இட ஒதுக்கீடு

ஒடிசாவில் கொண்டுவரப்பட்டுள்ள இட ஒதுக்கீடு திருத்தம் அம்மாநிலத்தில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. பட்டியலினத்தவர்களுக்கு கல்வியில் 8%-லிருந்து 16.25% ஆக இட ஒதுக்கீடு உயர்த்தப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கு 12%-லிருந்து 22.50% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், OBC பிரிவில் சமூக & பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு 11.25% என்ற ஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


