News December 29, 2025
BREAKING: பள்ளிகள் விடுமுறை.. அரசு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

பள்ளிகள் தொடர் விடுமுறை, புத்தாண்டு விடுமுறையையொட்டி மக்கள் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாளையும்(டிச.30), நாளை மறுநாளும் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இருந்து கூடுதலாக சுமார் 1,000 பஸ்கள் இயக்கப்பட உள்ளன. www.tnstc.in இணையதளம் (அ) TNSTC செயலியில் இப்போதே டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். SHARE IT.
Similar News
News February 3, 2026
வேட்டி, சேலையில் துரோகம் செய்யும் திமுக: அருண்ராஜ்

ஏழைகளுக்குத் தரவேண்டிய பொருட்களை பதுக்கி, திமுக அரசு முறைகேடாக தில்லுமுல்லு செய்திருப்பதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். ஈரோட்டில் உள்ள தனியார் கிடங்கு ஒன்றில் ஆயிரக்கணக்கில் இலவச வேட்டி, சேலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும், ஏழைகளுக்கு துரோகம் செய்யும் தீய சக்தி திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டியடிப்பது காலத்தின் கட்டாயம் எனவும் தெரிவித்துள்ளார்.
News February 3, 2026
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

புதிய வருமான வரிச் சட்டத்தின் கீழும், சுய குடியிருப்பு வீடுகளுக்கான வீட்டுக் கடன் வட்டி செலுத்துதலில் ஆண்டுக்கு ₹2 லட்சம் வரை வரி விலக்கு தொடரும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்.1 முதல் அமலுக்கு வரும் புதிய சட்டத்தின்படி, வீடு கட்டுமானத்தில் இருக்கும்போது செலுத்தப்படும் வட்டியும் (Pre-construction interest) இந்த ₹2 லட்சம் வரம்பிற்குள் அடங்கும் எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
News February 3, 2026
நடுநிலையில் மோடி.. மோதும் டிரம்ப், புடின்

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்துவதாக மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று அறிவித்திருந்தார். இந்நிலையில், தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவது குறித்து இந்தியா எதுவும் கூறவில்லை என்று ரஷ்யா விளக்கமளித்துள்ளது. டிரம்ப் அறிவிப்புக்கு எதிராக இந்த விளக்கம் வந்துள்ளதால், ரஷ்யாவிடமும் எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடரும் என்று கூறப்படுகிறது.


