News December 26, 2025

BREAKING: பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

image

பள்ளிகள் திறப்பையொட்டி அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி திறக்கப்படும் முதல்நாளே, மாணவர்களுக்கு மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடநூல் கழகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், தாமதமின்றி புத்தகங்கள் கிடைப்பதை பள்ளி HM-கள் உறுதி செய்யுமாறும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News

News January 1, 2026

திருவள்ளூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.

News January 1, 2026

FLASH: ஆரம்பமே அட்டகாசம்!

image

புத்தாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 189 புள்ளிகள் உயர்ந்து 85,409 புள்ளிகளுடனும், நிஃப்டி 51 புள்ளிகள் உயர்ந்து 26,181 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகின்றன. இதனால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News January 1, 2026

விஜய்யால் பாஜகவுக்கு சவால்: SG சூர்யா

image

விஜய்க்கு இருக்கும் திரைக்கவர்ச்சி பின்னணி, பாஜக போன்ற பேரியக்கங்களுக்கு சவாலாக இருப்பதாக SG சூர்யா கூறியுள்ளார். திரைக்கவர்ச்சியோ, ஊடகக் கவர்ச்சியோ பாஜகவுக்கு இல்லை என்ற அவர், தவெகவை விடவும் பன்மடங்கு அதிகமாக பாஜக உழைத்தால் மட்டுமே மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்த முடியும் என்றார். மேலும், தீவிரமான களப்பணி மூலமாக ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவோம் என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!