News August 8, 2024

BREAKING: பல்லடத்தில் வாலிபர் வெட்டி படுகொலை

image

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவிற்குட்பட்ட கரையான்புதூர் பகுதியில் இன்று காலை மர்ம நபர்களால் துரத்திச் செல்லப்பட்ட வாலிபர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த சம்பவ இடத்திற்குச் சென்ற டிஎஸ்பி விஜிகுமார் தலைமையிலான போலீசார் உடலை கைப்பற்றி உயிரிழந்தவர் யார்? கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News October 29, 2025

திருப்பூர்: இரவு நேர காவலர்கள் ரோந்து விபரம்!

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இரவு பணியில் பாதுகாக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, தாராபுரம், காங்கேயம், பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் அவசர உதவிக்கு 108 அழைக்கவும்.

News October 29, 2025

திருப்பூர்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் இன்று (28.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட காவல்துறையினர் அறிவித்துள்ளனர். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதிகளில் உள்ள காவல்துறையினரின் இரவு ரோந்துப பணி விபரம் மாவட்ட காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

News October 28, 2025

உடுமலையில் இறைச்சி பொருட்கள் தயாரிப்பு இலவச பயிற்சி!

image

உடுமலை அருகே கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் கால்நடை உற்பத்தி பொருட்கள் தொழில்நுட்பத் துறையில் இறைச்சி மற்றும் இறைச்சி பொருட்களை பதப்படுத்தும் உதவியாளர் குறித்த கட்டணமில்லா பயிற்சி வழங்கப்பட உள்ளது. முன்பதிவு செய்ய கீழ்க்கண்ட www.tnskill.gov.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என கால்நடை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!