News August 31, 2025
BREAKING : பரமக்குடி அருகே விபத்தில் 3 பேர் பலி

ராமநாதபுரம் செட்டியார் தெருவில் இருந்து குற்றாலம் சென்ற காரும், மதுரையில் இருந்து வீட்டை காலி செய்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ராமநாதபுரம் வந்த மினி லாரியும் இன்று (ஆக. 31) அதிகாலை 2 மணியளவில் பரமக்குடி நென்மேனி அருகே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் ஓட்டுநர் காளீஸ்வரன், ஜமுனா, ரூபினி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
Similar News
News September 1, 2025
ராமநாதபுரத்தில் எங்கு ஏர்போர்ட் அமைகிறது தெரியுமா..!

ராமேஸ்வரத்திற்கு வரும் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ராமநாதபுரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார். மாவட்ட நிர்வாகம் கீழக்கரை, உச்சிப்புளி ஆகிய 2 இடங்களை இறுதிப்பட்டியலில் தேர்வு செய்துள்ளது. 600 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உச்சிப்புளியில் கடற்படை அனுமதி பெற்று ஆய்வு செய்யப்பட்டு, விரைவில் இடம் இறுதியாக்கப்படும். *ஷேர்*
News August 31, 2025
BREAKING பரமக்குடி: கண்மாயில் மூழ்கி சிறுவன் பலி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த வீரபாண்டி மகன் திவின்குமார்(10) இன்று அக்கிராமத்தில் உள்ள கண்மாயில் மாலை நேரத்தில் கால் கழுவ சென்று உள்ளார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகத்தின் பேரில் கண்மாயில் தேடினர். பரமக்குடி தீயணைப்பு துறை வீரர்கள் உயிரிழந்த நிலையில் சிறுவனை உடலை கண்மாயிலிருந்து மீட்டனர். சத்திரக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News August 31, 2025
ராமநாதபுரம்: EXAM இல்லை ரயில்வேயில் 2,418 பணியிடங்கள்

ராமநாதபுரம் மக்களே மத்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள 2,418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 10th (அ) ITI தகுதி போதுமானது, மாதம் ரூ.7,700 முதல் ரூ.8,050 வரை சம்பளம் வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <