News September 18, 2025
BREAKING: பரமக்குடியில் மின்னல் தாக்கி ஒருவர் பலி

ராமநாதபுரம் அருகே ஏந்தல் காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ்(32). பார்த்திபனூர் காமாட்சி நகரில் வசித்த இவர் சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இன்று (செப்.18) மாலை 5 மணியளவில் மிதமான மழை பெய்தது. அப்போது வேலை விஷயமாக மேலப்பெருங்கரை சென்ற ரமேஷ், நாடக மேடை அருகே புளியமரத்தின் கீழ் நின்றபோது மின்னல் தாக்கி இறந்தார். இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News April 3, 2026
ராம்நாடு : கறவை மாடு வாங்க ரூ.1,20,000 வரை கடன்

தமிழ்நாடு அரசின் TABCEDCO கறவை மாடுகளை வாங்க ரூ.1,20,000 வரை கடன் வழங்குகிறது. இந்த கடனை பயனாளிகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும். மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள 18 முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து இதற்கு விண்ணப்பிக்கலாம். SHARE IT
News April 3, 2026
ராம்நாடு : ரயில்வேயில் 11,127 காலிப்பணியிடங்கள்

ரயில்வேயில் காலியாக உள்ள 11,127. Assistant loco pilot பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐடிஐ, டிப்ளமோ, பி.இ/பி.டெக். படித்த 18-30 வயதிற்குட்பட்ட அனைவரும் 15.05.2026 முதல் 14.06.2026 வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்கு ரூ.19,900- 63,200 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், https://www.rrbapply.gov.in/ இணையதளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 3, 2026
ராம்நாடு : காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில், திருவாடானை தொகுதியில் ராம கருமாணிக்கம் போட்டியிடவுள்ளார்.


