News October 16, 2025
BREAKING: நெல்லையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நெல்லை மாவட்டம் முழுவதும் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பாளை, சேரன்மகாதேவி வட்டாரங்களில் கனத்த மழை பெய்கிறது. இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் காரணமாக இன்று (16.10.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மரு இரா.சுகுமார் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News October 16, 2025
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

பாபநாசம் : உச்சநீர்மட்டம் : 143 அடி, நீர் இருப்பு : 84 அடி, நீர் வரத்து : 135.97 கனஅடி வெளியேற்றம் : 350 கன அடி; சேர்வலாறு : உச்சநீர்மட்டம் : 156 அடி, நீர் இருப்பு : 96.98 அடி, நீர்வரத்து : NIL, வெளியேற்றம் : NIL; மணிமுத்தாறு : உச்சநீர்மட்டம்: 118, நீர் இருப்பு : 92.11 அடி, நீர் வரத்து : 201.29 கனஅடி, வெளியேற்றம் : 30 கனஅடி; வடக்கு பச்சையாறு: உச்சநீர்மட்டம்: 50 அடி, நீர் இருப்பு: 11 அடி.
News October 16, 2025
தீபாவளி நேரங்களில் இதனை செய்யாதீர்கள் – நெல்லை காவல்

தீபாவளி பண்டிகை வருகிற திங்கள் கிழமை கொண்டாடப்பட உள்ளது. இத்த நிலையில் பேருந்துகள், ரயில்கள் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பட்டாசுகள் மற்றும் பிற வெடிக்கும் பொருட்களை எடுத்துச் செல்வது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பேருந்துகள், ரெயில்களில் பயணிகள் பட்டாசுகளை கொண்டு செல்ல வேண்டாம் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க
News October 16, 2025
நெல்லை: இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள்

திருநெல்வேலி மாநகர இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி பாளை டவுன் தச்சை ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும் உதவி ஆய்வாளர்களும், இன்று [அக்.15] இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். உதவி ஆணையர் கணேசன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார். பொதுமக்கள் காவல் உதவிக்கு மேற்கண்ட தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளலாம்.