News August 21, 2025
BREAKING: நீலகிரி இளைஞர் தவெக மாநாட்டில் பலி!

மதுரையில் இன்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கலந்துகொண்ட நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ரோஷன் என்ற இளைஞர் மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். அதிக வெயில், கூட்ட நெரிசலால் மயக்கமடைந்த ரோஷனுக்கு முதலுதவி சிகிச்சை தரப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்கு பின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News February 2, 2026
நீலகிரி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

நீலகிரி: மசினகுடி அருகே மாயர் கிராமத்தை சேர்ந்த பாப்பம்மாள் என்பவருக்கு, அவர் இறந்துவிட்டதாக தவறாக பதிவானதால் கடந்த 6 மாதங்களாக ஓய்வூதியம் நிறுத்தப்பட்டுள்ளது. “நான் உயிருடன் தான் இருக்கிறேன், நான் இறக்கவில்லை” என தெரிவித்த அவர், ஆவணங்களில் தவறான விவரங்களை திருத்தி, நிறுத்தப்பட்ட ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்தில் வலியுறுத்தியுள்ளார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
News February 2, 2026
நீலகிரி: இனி ஒரு Hi போதும்.. ஈஸியா ஆதார் அட்டை!

நீலகிரி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் இங்கே <
News February 2, 2026
நீலகிரி: உங்கள் போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்!

▶️ மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377, ▶️ அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 5991500, ▶️ ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090, ▶️ குழந்தைகளுக்கான அவசர உதவி 1098, ▶️ முதியோருக்கான அவசர உதவி -1253, ▶️தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033, ▶️ பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!


