News November 29, 2024
BREAKING: நாளை WORK FROM HOME!

ஃபெஞ்சல் புயல் நாளை மாமல்லபுரம் அருகே கரையை கடப்பதால் வட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் ஐடி ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News August 23, 2025
ராகுல் தான் நாளைய PM: செல்வப்பெருந்தகை பதிலடி

நெல்லை பாஜக பூத் கமிட்டி மாநாட்டில், ராகுல் ஒருபோதும் பிரதமராக முடியாது என அமித் ஷா கூறியிருந்தார். இதற்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். அமித்ஷாவின் கருத்து மக்களின் விருப்பத்தையும், ஜனநாயகத்தின் அடிப்படையையும் அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறிய அவர், இம்மாதிரியான கருத்துக்கள் ஆளும் கட்சியின் தோல்வி பயத்தை வெளிப்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News August 23, 2025
அட்லி-அல்லு அர்ஜுன் படம்.. Escape Mode-ல் தீபிகா?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கும் படத்தின் ஷூட்டிங், கதை விவாதம் என்ற பெயரில் ஒத்திவைக்கப்பட்டுக்கொண்டே போகிறதாம். ஃப்ளாப் பட்டியலில் தானும் சேரக்கூடாது என்பதற்காக அலர்ட் மோடில் இருக்கும் அட்லி, கதை விவாதக் குழுக்களை உருவாக்கி ஒவ்வொரு விவாதத்திற்கும் ஆஜராகிவருகிறாராம். ஏற்கெனவே கொடுத்த தேதிகளில் ஷூட்டிங் வைக்காததால், ‘எஸ்கேப் ஆகிவிடலாமா’ என்று தீபிகா படுகோன் யோசிப்பதாக கூறப்படுகிறது.
News August 23, 2025
விஜய் அபார சாதனை.. அரசியலில் புதிய வரலாறு

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக தொண்டர்கள் பங்கேற்ற மாநாடு(14.78 லட்சம்) என தவெகவின் மதுரை மாநாடு சாதனை படைத்திருப்பதாக Times of India தெரிவித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பாஜக (11.86 லட்சம்), சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சி(11.03 லட்சம்), தெலுங்கு தேசம் கட்சி(10.55 லட்சம்), பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி(5.13 லட்சம்) ஆகியவை இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. விஜய்க்கு கூடிய கூட்டம் ஓட்டாகுமா?