News November 3, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News November 4, 2025
நட்சத்திரமாக மின்னும் ரஷ்மிகா மந்தானா!

சுல்தான், வாரிசு படங்களுக்கு பிறகு கோலிவுட்டில் நடிக்கவில்லை என்றாலும் ரஷ்மிகா மந்தனா மீது தமிழ் ரசிகர்களுக்கு க்ரஷ் உண்டு. அதற்கு ஏற்றார் போல் அவரும் அடிக்கடி போட்டோஷுட் நடத்தி, அவற்றை SM-ல் பதிவிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கிறார். ஒரு படத்திற்கு ₹8-10 கோடி சம்பளம் வாங்கும் அவரை மீண்டும் தமிழில் நடிக்க வைக்க கோலிவுட் வட்டாரம் முயற்சிக்க வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.
News November 4, 2025
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையின் நன்மை

*காலை நேரத்தில் ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையை சாப்பிடுவதால் உடலில் இரும்புச் சத்து குறைபாட்டை போக்க முடியும். *இதில் நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் மேம்படும். *இது உடலில் கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. *உடலின் ரத்தத்தில் சர்க்கரை உறிஞ்சுதல் ஒழுங்குபடுவதால், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயம் குறைகிறது. *சரும பிரச்னைகளை தீர்த்து இயற்கையான பொலிவை வழங்குகிறது. *உடலில் எனர்ஜி அதிகரிக்கிறது.
News November 4, 2025
Chat Gpt-ல் மருத்துவம், சட்ட ஆலோசனைகள் நிறுத்தம்

Chat Gpt-ஐ இனி கல்வி தொடர்பான விஷயங்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Chat Gpt மருத்துவம், சட்டம் மற்றும் நிதி சார்ந்தவற்றில் ஆலோசனைகளை வழங்காது என Open AI நிறுவனம் கூறியுள்ளது. Chat Gpt பயன்படுத்தி பலரும் மருத்துவரை நாடாமல் தாங்களாக சிகிச்சை எடுப்பது உயிருக்கு ஆபத்தாக மாறும் காரணத்தினால், Open AI நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.


