News November 27, 2025
BREAKING: நாகை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

இலங்கை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் நவ.28 (நாளை) மற்றும் நவ.29 ஆகிய தேதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. SHARE NOW!
Similar News
News November 28, 2025
மழைநீர் சேகரிப்பு: நாகை கலெக்டர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், மழை நீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்து நாகப்பட்டினம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அருகே விழிப்புணர்வு பேரணி, நாளை (28.11.2025) வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் கொடியசைத்து பேரணி துவக்கி வைக்க உள்ளார்.
News November 28, 2025
நாகை: விளையாட்டு வீரர்களுக்கு அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சி.மு. குமரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நாகையில் உள்ள முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டரங்கத்தில் உடற்பயிற்சி கூடங்கள், பல்வேறு விளையாட்டுகளுக்கான பயிற்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இளைஞர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
News November 28, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிகளுக்கான கணக்கீட்டு படிவத்தை பூர்த்தி செய்ய (டிசம்பர் 4) கடைசி நாளாகும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள வாக்காளர்கள் விரைந்து தங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து கொடுத்து, தங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.


