News January 8, 2026
BREAKING: நள்ளிரவில் சந்திப்பு.. கூட்டணியில் திடீர் மாற்றமா?

டெல்லி சென்ற EPS நேற்று இரவு 10 மணிக்கு அமித்ஷாவை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். இதில் OPS, டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என அமித்ஷா வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் கூட்டணியை 10 நாட்களுக்குள் இறுதி செய்யவும் அவர் EPS-யிடம் கேட்டுக்கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் வரும் நாள்களில் அதிமுக கூட்டணியில் பெரும் மாற்றம் நிகழலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
Similar News
News January 20, 2026
பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

தொடர்ந்து 2-வது நாளாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,065.71 புள்ளிகள் சரிந்து 82,180 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 353 புள்ளிகள் சரிந்து 25,232.50 புள்ளிகளில் நிறைவடைந்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்துள்ளனர்.
News January 20, 2026
கவர்னரை நிர்பந்திப்பது கண்டனத்திற்குரியது: TTV

மக்களுக்கான செயல்திட்டங்களை வகுக்க வேண்டிய கவர்னர் உரை, திமுகவினரின் கனவை பிரதிபலித்திருப்பதாக TTV தினகரன் விமர்சித்துள்ளார். மேலும், உண்மைக்கு புறம்பான தகவல்களை அறிக்கையாக தயாரித்து அதனை கவர்னர் வாசிக்க திமுக நிர்பந்தித்துள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதே நேரத்தில் தேசிய கீதத்தை முதலில் பாடக்கோரி நீண்ட நெடிய பாரம்பரியமிக்க பேரவை மரபை மாற்றக் கோருவது அழகல்ல என கவர்னரையும் சாடியுள்ளார்.
News January 20, 2026
சற்றுமுன்: தங்கம் விலையில் மீண்டும் மாற்றம்

தங்கம் விலை இன்று ஒரேநாளில் சவரனுக்கு ₹3,600 அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் ₹1,280 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹2,320 உயர்ந்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சென்னையில் தற்போது ஆபரணத் தங்கம் 1 கிராம் ₹13,900-க்கும், 1 சவரன் ₹1,11,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


