News December 12, 2025

BREAKING: நடிகை ராஜேஸ்வரி காலமானார்

image

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி(39) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த 7-ம் தேதி கணவருடன் ஏற்பட்ட பிரச்னையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் ஹாஸ்பிடலில் அனுமதித்த நிலையில், 5 நாள்களாக அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி சீரியல்கள் மூலம் ராஜேஸ்வரி தமிழ் மக்களின் மனம் கவர்ந்தார். தற்கொலை எந்த பிரச்னைக்கும் தீர்வாகாது.

Similar News

News December 12, 2025

மேகதாது அணை: குழுவை அமைத்தது கர்நாடகா

image

மேகதாது அணை திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான பணிகளை மேற்கொள்ள 30 அதிகாரிகள் கொண்ட குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. முன்னதாக, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு SC அனுமதி அளித்தது. அத்துடன், தமிழக அரசின் கருத்தை கேட்கவும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த நடவடிக்கையால் தமிழக விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

News December 12, 2025

NDA கூட்டணியில் இந்த கட்சிகள் சேரலாம்: அண்ணாமலை

image

NDA கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி தேசிய பாஜக தலைமை, EPS, நயினார் ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். TTV, OPS உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்ற அவர், இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழக NDA தலைவர் EPS முடிவெடுப்பார் என்றார். மேலும், தங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமகவையும் இணைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

News December 12, 2025

TNPSC குரூப் 4 காலியிடங்கள் 4,400 ஆக அதிகரிப்பு

image

2026-ல் நடைபெறவுள்ள <<18460223>>TNPSC குரூப் 4<<>>-க்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்.6-ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து டிச.20-ல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,000 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,400 காலிப்பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் அடுத்த ஆண்டு நிரப்பப்படவுள்ளது.

error: Content is protected !!