News December 25, 2025
BREAKING: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அறிவிப்பு

தேர்தல் அறிக்கை தயார் செய்ய அதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணி, ஆர்.பி.உதயகுமார், வைகைச் செல்வன் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர். பல தரப்பட்ட மக்களின் கருத்துக்களை கேட்கும் வகையில், இக்குழுவினரின் சுற்றுப்பயண திட்டம் விரைவில் வெளியிடப்படும் என்றும் EPS அறிவித்துள்ளார்.
Similar News
News December 30, 2025
ரயில் பயணிகளுக்கு நற்செய்தி!

65 எக்ஸ்பிரஸ், மெயில் ரயில்களின் வேகம் வரும் ஜன.1 முதல் அதிகரிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்மூலம் பல வழித்தடங்களில் பயணிகளுக்கு 5 முதல் 85 நிமிடங்கள் வரை பயண நேரம் மிச்சமாகும். முன்னதாக மணிக்கு 80/90 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் அவற்றின் வேகம் 110 கிமீ-ஆக உயர்கிறது. இதற்கு தென் மாவட்டங்களில் அமைக்கப்பட்ட இரட்டை வழித்தடம் முக்கிய காரணமாக கூறப்பட்டுள்ளது.
News December 30, 2025
ராதிகா மீது கோபத்தில் இருந்தேன்: வரலட்சுமி

தனது பெற்றோர்கள் (சரத்குமார் – சாயா தேவி) பிரிந்ததற்கு ராதிகாதான் காரணம் என சிறுவயதில் நினைத்ததாக வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இதனால் ராதிகா மீது கோபத்தில் இருந்தேன். ஆனால் அந்த கோபம் வலியில் இருந்து வந்ததே தவிர உண்மையின் அடிப்படையில் அல்ல. மெச்சூரிட்டி வந்ததும், எனது பெற்றோர்கள் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் பிரிந்ததை புரிந்துகொண்டதும், ராதிகா மீது அன்பு உருவானதாக தெரிவித்துள்ளார்.
News December 30, 2025
ஒரே வாரத்தில் பாத வெடிப்பு மறைய TIPS

➤விளக்கெண்ணெய் 20 மில்லி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதை சூடாக்கி 2 சின்ன வெங்காயம், 1 சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும் ➤அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள் ➤1 சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள் ➤காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வையுங்கள் ➤தினமும் இரவு, வெடிப்பு உள்ள இடத்தில் தடவி அப்படியே விடுங்கள் ➤ 1 வாரத்திலேயே பலன் கிடைக்கும். SHARE.


