News November 14, 2025
BREAKING: தெ.ஆப்பிரிக்க அணி தடுமாற்றம்

தெ.ஆப்பிரிக்க அணி இந்தியாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 7 விக்கெட்களை இழந்துள்ளது. தொடக்க வீரர்கள் மார்க்ரம், ரிக்கெல்டன் ஆகியோர் பும்ரா வேகத்தில் விக்கெட்டை பறிகொடுத்தனர். நடுவரிசை வீரர்களுக்கு பெரும் நெருக்கடி கொடுத்த குல்தீப் யாதவ், முல்டர் மற்றும் கேப்டன் பவுமாவை ஆட்டம் இழக்க செய்தார். தற்போது 147-7 என்ற நிலையில் தெ.ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது.
Similar News
News March 29, 2026
ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.. நேற்று DMK, ADMK.. இன்று TVK

பண்ருட்டி ராமச்சந்திரன் தொடங்கிய MGR அண்ணா திமுகவில் இருந்து நேற்று விலகிய ரஞ்சித்குமார், தவெக காஞ்சிபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். சீட் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அதிமுக திருப்பத்தூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் டாக்டர் திருப்பதியை திருப்பத்தூர் வேட்பாளராகவும், திமுகவில் சீட் கிடைக்காமல் அதிருப்தியில் இருந்த ஆர்.எஸ் முருகனை நெல்லை வேட்பாளராகவும் விஜய் அறிவித்துள்ளார்.TNElection2026
News March 29, 2026
மதியம் அசைவம் சாப்பிட்டதும் தூங்கலாமா?

சிக்கன், மட்டன், மீன் என மதியம் நன்றாக சாப்பிட்டதும் தூக்கம் சொக்கும். ஆனால், உடனே தூங்கிவிட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். அசைவம் கடினமான உணவு என்பதால், ஜீரணமாக நேரமாகும். எனவே, சாப்பிட்ட 30-45 நிமிடங்கள் கழித்து தூங்க வேண்டும். அதேபோல், குட்டி தூக்கம் மட்டுமே போட வேண்டும். அதிகபட்சம் 45 நிமிடங்கள் தூங்கிக்கொள்ளலாம் என்கின்றனர். ஷேர் பண்ணுங்க.
News March 29, 2026
ஏப்.1 முதல் பான் கார்டில் வரும் மாற்றங்கள்.. Must Read

*புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது ஆதார் கார்டுடன் வாக்காளர் அட்டை, 10-ம் வகுப்பு மார்க் ஷீட் உள்ளிட்ட சில ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டி வரலாம்.
*ஆதார் கார்டிலுள்ள பெயரிலேயே பான் கார்டிலும் உங்கள் பெயர் இடம்பெறும்.
*புதிய கார்டு பெறுவதற்கும், திருத்தங்கள் மேற்கொள்வதற்கும் புதிய படிவங்கள் வழங்கப்படும். இந்த விதிகள் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. SHARE IT.


