News January 5, 2026

BREAKING தூத்துக்குடி ரயில் தடம் புரண்டது

image

சென்னை எழும்பூரில் இருந்து தினமும் இரவு 7.15 மணிக்கு தூத்துக்குடிக்கு முத்துநகர் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் சற்று முன் இந்த ரயிலின் பராமரிப்பு பணி முடிந்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் போது ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News January 29, 2026

கோவில்பட்டி: ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர்கள் கைது

image

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாரை சேர்ந்த கிருஷ்ணசாமி (70) என்பவர் வெள்ளாடுகள் வளர்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது ஆடுகள் திருடப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் ஆடுகளை திருடியதாக அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் (42) மற்றும் மகேஷ் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர்.

News January 29, 2026

தூத்துக்குடி: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

image

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)

(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 29, 2026

தூத்துக்குடி: சகோதரர்கள் அடுத்தடுத்து தற்கொலை

image

மாப்பிள்ளையூரணி ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் சிவராஜ் (25). இவரது அண்ணன் நிர்மல்ராஜ் கடந்த மாதம் குடும்ப பிரச்சனை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். அண்ணன் மீது அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்ததால் நிர்மல்ராஜ் இறந்த பின்பு சிவராஜ் மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவராஜ் தனது படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!