News September 9, 2025
BREAKING: தி.மலை வரும் விஜய்

நடிகர் விஜய், தவெக என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலை நோக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறார். விக்கிரவாண்டி மற்றும் மதுரையில் தவெகவின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த கையோடு, மாவட்ட வாரியாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். செப்.13 திருச்சியில் தனது பிரசாரத்தை தொடங்கும் விஜய் அக்.18ல் தி.மலையில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயை காண தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Similar News
News September 9, 2025
கலெக்டருக்கு நினைவுப்பரிசு வழங்கிய எ.வ.வே.கம்பன்

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டி இன்று (செப்.09) துவக்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வை துவக்கி வைக்க வருகை புரிந்த தி.மலை கலெக்டர் தர்ப்பகராஜை தமிழ்நாடு மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன் நினைவு பரிசு வழங்கி வரவேற்றார். உடன் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
News September 9, 2025
தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ் ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், தி.மலை, வந்தவாசி, வெம்பாக்கம், மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சிகளில் தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News September 9, 2025
தி.மலை: உள்ளூரில் அரசு வேலை

தி.மலை மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையில், ஆரணி, சேத்துப்பட்டு, செய்யார், ஜவ்வாதுமலை, போளூர், தெள்ளார், திருவண்ணாமலை, வந்தவாசி, வெம்பாக்கம் மேற்கு ஆரணி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஓட்டுநர், எழுத்தர், அலுவலக உதவியாளர், மற்றும் இரவுக்காவலர் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.