News August 28, 2025

BREAKING: தி.மலை அருகே பள்ளி பேருந்துகள் மோதி விபத்து

image

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சீனிவாசபுரம் கூட்ரோடு பகுதியில் இரண்டு தனியார் பள்ளி பேருந்துகள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்த நிலையில், மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

Similar News

News September 5, 2025

தி.மலை: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

image

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-tv-tn@nic.in, tiruvannamalai.dcdrf@gmail.com என்ற இ-மெயிலில் (அ) மாவட்ட நுகர்வோர் மன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (04175 -232395) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618149>>தொடர்ச்சி<<>>

News September 5, 2025

நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

image

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க

News September 5, 2025

தி.மலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு விருது

image

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நல்லாசிரியர் விருதுகள் இன்று (செப்டம்பர் 5) வழங்கப்படுகின்றன. மொத்தம் 386 ஆசிரியர்கள் விருது பெறுகின்ற நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!