News August 5, 2025
BREAKING: திருவள்ளூர் MBBS மாணவி தற்கொலை!

திருவள்ளூரைச் சேர்ந்த திவ்யா கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். டி.பி.சத்திரம் பகுதியில் தங்கியிருந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 5) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர் தந்தை பணிச்சுமை காரணமாகதான் தனது மகள் தற்கொலை செய்துகொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News August 5, 2025
திருவள்ளூரில் ரயில்வே வேலை!

திருவள்ளூர் மக்களே, இந்திய ரயில்வேயில் ஸ்டேசன் மாஸ்டர்- 5623, டிக்கெட் சூப்பர்வைசர்- 6235, ரயில் மேனேஜர்- 7367, அக்கவுண்ட் அசிஸ்டெண்ட்- 7520, கிளர்க்- 7367 என மொத்தம் 30,307 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு டிகிரி படித்திருந்தாலே போதும். ரூ.29,000 முதல் ரூ.35,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதிக்கு மேல்தான் இந்த <
News August 5, 2025
திருவள்ளூரில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஆர்.கே.பேட்டை, பூந்தமல்லி, கடம்பத்தூர், சோழவரம், திருத்தணி பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை இங்கு <
News August 5, 2025
அன்னதானம் வழங்க அனுமதி பெற வேண்டும்

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆடிக்கிருத்திகை தெப்பத்திருவிழா ஆகஸ்ட் 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவில் அன்னதானம் வழங்க உத்தேசிக்கும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் www.foscos.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 13க்குள் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.