News October 26, 2024
BREAKING: திருப்பூர் அருகே விபத்து 3 பேர் பலி

திருப்பூர் மாவட்டம் அவிநாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழங்கரை அருகே அதிகாலையில் கோவையில் இருந்து வந்த கார் ஒன்று, பெங்களூர் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்பர்ணா, ஹேமா மற்றும் இவர்களின் தோழி மோனிஷ் ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்துகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
அறிவித்தார் திருப்பூர் ஆட்சியர்

திருப்பூர் கலெக்டர் மணீஷ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள குரூப்-1 தேர்வை எதிர்கொள்ளும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில், இந்த இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில் கலந்து கொள்ள 0421-2999152 அல்லது 9499055944 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என குறிப்பிட்டு இருந்தார். (SHARE)
News February 8, 2026
திருப்பூர் இரவு ரோந்து போலீசார் விபரம்

திருப்பூர் மாவட்டத்தில் (08.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News February 8, 2026
திருப்பூரில் இப்படி ஒரு அற்புத கோயிலா?

திருப்பூர் பெருமாநல்லூரில் அமைந்துள்ளது, கொண்டத்துக்காளியம்மன் கோயில். சக்திவாய்ந்த கொண்டத்துக் காளியம்மனை, சேரர்கள், போருக்கு செல்லும் முன்பு வணங்கி செல்வார்களாம். தடைகளை போக்கும் சர்வ வல்லமை கொண்ட அம்மனை, வழிபட்டால், குடும்ப பிரச்சனை தீர்வதோடு, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. பங்குனி திருவிழாவில், விரதம் இருந்து குண்டம் இறங்கினால், அம்மன் வேண்டிய வரத்தை தருவாளாம்.


