News August 6, 2025

BREAKING திருப்பூர் அருகே காவல் அதிகாரி வெட்டிப்படுகொலை!

image

திருப்பூர் அலங்கியம் தளவாய்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். குடிமங்கலம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு பணியில் இருந்தபோது, தந்தை மகன் பிரச்சனை தொடர்பாக 100 எண்ணுக்கு அழைப்பு வந்துள்ளது. இதை விசாரிக்க சென்ற சண்முகசுந்தரம், கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குடிமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 6, 2025

திருப்பூரில் ரூ.96,365 சம்பளம்.. கூட்டுறவு வங்கி வேலை!

image

திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் காலியாக உள்ள 22 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ. 96,365 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<> இங்கு கிளிக் <<>>செய்யவும். விண்ணப்பிக்க கடைசி தேதி 29.08.2025 ஆகும். இதை வேலை தேடும் அனைவருக்கும் SHARE பண்ணுங்க. ஒருவருக்காவது உதவும்!

News August 6, 2025

BREAKING: திருப்பூர் எஸ் ஐ கொலை வழக்கில் 2 பேர் சரண்

image

திருப்பூர் மாவட்டம் உடுமலை குடிமங்கலம் சிக்கனூத்தில் தந்தை-மகன் வழக்கு விசாரணைக்கு சென்ற எஸ்.எஸ் ஐ சண்முகவேல் கொலை வழக்கில் தந்தை மூர்த்தி மற்றும் மகன் தங்கபாண்டியன் ஆகியோர் தற்போது சரணடைந்துள்ளனர், மேலும் தலைமறைவாக உள்ள 3வது நபரான மணிகண்டனை காவல் துறையினர் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News August 6, 2025

திருப்பூர்: மருத்துவமனையில் அமைச்சர் ஆறுதல்

image

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் நேற்று இரவு ரோந்து பணியில் இருந்த போது, வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் மு.பெ.பெசாமிநாதன் நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

error: Content is protected !!