News December 19, 2025

BREAKING: திருப்பூரில் 5.63 லட்சம் பெயர்கள் நீக்கம்

image

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த நவம்பர் மாதம் முதல் சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 5,63,785 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News December 26, 2025

திருப்பூர்: நீங்க கேன் தண்ணீர் குடிக்கிறிங்களா?

image

திருப்பூர் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News December 26, 2025

திருப்பூர்: இரவு நேர ரோந்து போலீசார் விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று (டிச.26) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி, காங்கேயம் பகுதியில் உள்ள மக்கள் தங்கள் பகுதியில் குற்றம் நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்தவும். அவசர உதவிக்கு 108ஐ அழைக்கவும்.

News December 26, 2025

கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனைக் கூட்டம்

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு தீவிர திருத்த பார்வையாளர் கோவிந்தராவ் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகள் குறித்து அரசியல் கட்சியினர் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

error: Content is protected !!