News May 7, 2025
BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News May 7, 2025
திருப்பூர்: முக்கிய காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்!

▶️திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) -9498101320. ▶️திருப்பூர் கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் – 9498104755, 0421-2970013. ▶️அவிநாசி DSP – 8300037777. ▶️பல்லடம் DSP – 8300043050. ▶️உடுமலைப்பேட்டை DSP – 8072519474. ▶️தாராபுரம் DSP – 9443808277, 04258-220325. ▶️காங்கேயம் DSP -7397027979, 04257-230883. இதை Share பண்ணுங்க.
News May 7, 2025
திருப்பூரில் பள்ளியில் வேலை

திருப்பூரில் உள்ள சைனிக் பள்ளியில் காலியாக உள்ள TGT, PGT, Clerk, Ward Boy பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 10th, 12th, B.Ed, B.P.Ed, B.Sc, BA, Diploma, M.Sc, MA, MBBS, PG Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு சம்பவளம் ரூ.22,000 முதல் ரூ.47,000 வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க <
News May 7, 2025
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

திருப்பூரைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மகன் கமலேஷ் (14). வெள்ளகோவில் அருகே கள்ளமடை பகுதியில் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் உறவினர்களுடன் சேர்ந்து அங்குள்ள செயல்படாத கல் குவாரிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது சிறுவன் கமலேஷ் நீரில் மூழ்கி உயிரிழந்தான். இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.