News February 9, 2026
BREAKING: திருச்செந்தூர் முருகன் கோயில் திருவிழா தேதி அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசி திருவிழா வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி 27ம் தேதியும், பச்சை சாத்தி 28ம் தேதியும், திருத்தேர் மார்ச் 2ம் தேதியும், தெப்ப தேர் மார்ச் 3ம் தேதியும் நடைபெற உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Similar News
News February 16, 2026
தூத்துக்குடி: GAS BILL-ஐ விட அதிக பணம் கேட்டால்..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறாங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இண்டேன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்பி-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News February 16, 2026
தூத்துக்குடிக்கு புதிய எஸ்.பி பதவியேற்பு

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று பொறுப்பேற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன் பதவியேற்றார்.
News February 16, 2026
தூத்துக்குடி: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். SHARE பண்ணுங்க


