News November 7, 2025
BREAKING: திருச்செந்தூர் – பாலக்காடு ரயில் ரத்து

திருச்செந்தூரிலிருந்து பாலக்காடு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது தினமும் இயங்கி வருகிறது. இந்த ரயிலானது கோவில்பட்டி யார்டில் நடைபெறும் இன்ஜினியரிங் பணி காரணமாக இன்று(நவ.7) மட்டும் விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ரயில் இன்று திருச்செந்தூரில் இருந்து செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
தூத்துக்குடி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

தூத்துக்குடி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
News November 7, 2025
தூத்துக்குடி இரவு ஹலோ போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News November 6, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் பிடிஓ-க்கள் பணியிட மாற்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 3 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருச்செந்தூர் பிடிஓ, உடன்குடி அலுவலகத்திற்கும், உடன்குடி பிடிஓ இப்ராஹிம் சுல்தான், கயத்தார் அலுவலகத்திற்கும், கயத்தார் பிடிஓ வெங்கட்ராமன், தூத்துக்குடி உதவி இயக்குனர் அலுவலக ஊராட்சி அலுவலகத்திற்கும் பணியிட இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


