News November 10, 2025
BREAKING திருச்சி: பட்டப்பகலில் இளைஞர் படுகொலை

திருச்சி பீமநகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை தாமரைச்செல்வன் (24) எனும் இளைஞர் சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பயங்கர ஆயுதங்களுடன் அவரை துரத்தவே, அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்ற தாமரைசெல்வன் அருகில் இருந்த காவலர் குடியிருப்பில் புகுந்துள்ளார். இருப்பினும், அதை பற்றி கவலைப்படாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.
Similar News
News November 10, 2025
திருச்சி படுகொலை: அண்ணாமலை கண்டனம்

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திருச்சி மார்சிங்பேட்டை காவலர் குடியிருப்பில் ஒருவரை வெட்டி படுகொலை செய்திருப்பது, பொதுமக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது திருச்சியில் தான் தங்கியிருக்கிறார். அப்படி இருக்கும்போது, காவலர் குடியிருப்பிலேயே இப்படி ஒரு படுகொலை நடப்பது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் அவலநிலையைக் காட்டுகிறது’.
News November 10, 2025
‘திமுகவிற்காக உழைக்கும் நபர்’: எம்எல்ஏ-வை புகழ்ந்த முதல்வர்

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழாவில் இன்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அதில், ‘எம்எல்ஏ பழனியாண்டி பசி, தூக்கம் இன்றி திமுகவிற்காக உழைக்கும் நபர். 20 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்ரீரங்கம் தொகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றி உள்ளார். ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டு வாழ்த்தும் வாய்ப்பை பெற்றுள்ளேன்’ என்றார்.
News November 10, 2025
திருச்சி அருகே சிக்கிய ராட்சத பாம்பு

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த அயன்பொருவாய் குடியிருப்பு பகுதியில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு சுற்றி திரிவதாக துவரங்குறிச்சி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் குடியிருப்பு பகுதி அருகே கிடந்த மலைப்பாம்பை பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.


