News July 13, 2024
BREAKING: திமுக வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை பனையபுரம் அரசு பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தபால் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, தற்போது மின்னணு வாக்கு எண்ணிக்கையிலும் முன்னிலை வகித்து வருகிறார். தபால் – 470, மின்னணு – 1,361 வாக்குகள் பெற்று இரண்டிலும் முன்னிலையில் உள்ளார். பாமக மற்றும் நாதக வேட்பாளர்கள் பின்னிலையில் உள்ளனர்.
Similar News
News July 9, 2025
விழுப்புரம் அருகே தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது

விராட்டிக்குப்பம் சேர்ந்தவர் சாந்தமூர்த்தி. இவர், கடந்த ஜூன் 6ம் தேதி 16 வயதுள்ள மனநலம் பாதித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து சாந்தமூர்த்தியை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். எஸ்.பி மற்றும் ஆட்சியர் உத்தரவின் பேரில் நேற்று விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார், சாந்தமூர்த்தியை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
News July 9, 2025
நெல் சாகுபடி சிறப்பு திட்டத்தில் மானிய நிதி ரூ.7.87 கோடி

விழுப்புரத்தில் சான்று பெற்ற விதை நெல் மானியத்துடன் (1கி ரூ.20 மானியம்) 147.40 மெட்ரி டன், தரச் சான்று பெற்ற நெல் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நெல்சாகுபடி சிறப்பு திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்குரூ.7.87 கோடி மானிய உதவி வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 55 ஆயிரத்து 918 ஏக்கர் பரப்பில் நெல் உற்பத்திக்கு, மானிய உதவி வழங்கப்படுகிறது. உழவர் செயலி மூலம் பதிவு செய்யலாம்.
News July 9, 2025
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? 2/2

▶️விண்ணப்பிக்கும் நபர் அதே பகுதி / தாலுகாவை சேர்ந்தவராக இருக்க வேண்டும்
▶️கட்டாயம் தமிழ் பாடத்தைக் கொண்டு படித்திருக்க வேண்டும்.
▶️சைக்கிள்/ இரு சக்கர வாகனம் இயக்க தெரிந்திருக்க வேண்டும்
▶️எழுத்துத் தேர்வு, நேர்காணல் என இருக்கட்டங்களாக தேர்வு நடைபெறும்
விண்ணப்பங்களை அந்தந்த பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் நேரில் சென்றும் பெற்றுகொள்ளலாம்.
நண்பர்களுக்கு மறக்காம ஷேர் பண்ணுங்க