News March 2, 2026
BREAKING: திமுக முடிவு.. திருமாவளவன் அதிர்ச்சி

திமுக கூட்டணியிலுள்ள தேமுதிகவுக்கு 1 ராஜ்யசபா சீட் வழங்க CM ஸ்டாலின் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, தேமுதிக பொருளாளர் சுதீஷ், ராஜ்யசபா MP பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, 6 + 1 சீட் கொடுக்க திமுக சம்மதித்ததாக கூறப்பட்டது. இது, இன்று ராஜ்யசபா சீட் கேட்க திட்டமிட்டுள்ள விசிகவுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.
Similar News
News April 13, 2026
திருமாவை அவமதிப்பதா? அன்புமணி சாடல்

கூட்டணி கட்சியின் தலைவரை மதிக்காத பிரேமலதா மக்களை மதிப்பாரா என விருத்தாச்சல பிரசாரத்தில் அன்புமணி கேட்டுள்ளார். கடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திருமாவுடன் சேர்ந்து போராடியதாக கூறிய அவர், திமுக என்ற சதிகாரன் இடையில் வந்து எங்களை பிரித்துவிட்டான் என சாடியுள்ளார். அப்படிப்பட்ட திருமாவை பிரேமலதா <<19613152>>அவமதித்துவிட்டதாக<<>> அவர் விமர்சித்துள்ளார். ஆனால் திருமாவை அவமதிக்கவில்லை என பிரேமலதா விளக்கம் கொடுத்துவிட்டார்.
News April 13, 2026
போர் விளைவு.. வெள்ளி விலை ₹5,000 குறைந்தது

ஒரு வாரமாக வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ₹265-க்கு விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ₹5 குறைந்து ₹260-க்கு விற்பனையாகிறது. மொத்த விற்பனையில் பார் வெள்ளி கிலோவுக்கு ₹5,000 குறைந்து ₹2.60 லட்சமாக உள்ளது. ஈரான் – US போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால், சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2% சரிந்து 1 அவுன்ஸ்(28g) $74 ஆக உள்ளது.
News April 13, 2026
இதை கொஞ்சம் பாருங்க: டிரம்ப்-ஐ கலாய்த்த ஈரான்

ஹார்முஸ் நீரிணையில் ‘ஒவ்வொரு கப்பலையும்’ அமெரிக்கா முற்றுகையிட போவதாக டிரம்ப் எச்சரித்தார். இதற்கு பதிலடியாக, வெள்ளை மாளிகைக்கு அருகே விற்பனையாகும் பெட்ரோல் விலைகளின் போட்டோவை பகிர்ந்து, மகிழ்ச்சி அடையுங்கள் என ஈரான் சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கேலி செய்துள்ளார். மேலும், அமெரிக்காவில் விரைவில் எரிபொருள் விலை $5 டாலர் வரை உயரும்; எரிபொருளுக்காக ஏங்கும் நிலை உருவாகும் எனவும் எச்சரித்துள்ளார்.


