News December 17, 2025
BREAKING: திமுக தேர்தல் அறிக்கை.. வந்தது அறிவிப்பு

கனிமொழி MP தலைமையில் திமுக தேர்தல் அறிக்கை குழு அமைத்து, கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. TKS இளங்கோவன், PTR பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். 2026 தேர்தல் களம் 4 முனை போட்டியாகவுள்ள நிலையில், ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் கவர்ச்சிகரமான திட்டங்களை திமுக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத்தொகை உயர்வு குறித்தும் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News December 22, 2025
டிசம்பர் 22: வரலாற்றில் இன்று

*தேசிய கணித நாள்.
*1851 – இந்தியாவின் முதலாவது சரக்கு ரயில், உத்தராகண்டின் ரூர்க்கி நகரத்தில் இயக்கப்பட்டது.
*1887 – கணிதமேதை இராமானுஜன் பிறந்தநாள்.
*1964 – தனுஷ்கோடி மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியை புயல் தாக்கியதில் 1,800-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
News December 22, 2025
புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன்: PV சிந்து

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அனைவருக்கும் உண்டு, 100% தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று PV சிந்து கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு தான் அனுபவ வீராங்கனையாக இருந்தாலும் தொடர்ந்து புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதியிலேயே சிந்து வெளியேறியிருந்தார்.
News December 22, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
*பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
*எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.


