News March 20, 2026
BREAKING: திமுக கூட்டணியில் இருந்து விலகுகிறார்

தவாக, திமுக கூட்டணியிலிருந்து விலகி தனித்து போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. 4 நாள்களுக்கு முன்னர் திமுக தலைமைக்கு, வேல்முருகன் வைத்த தேர்தல் வாக்குறுதிகள், கூடுதல் சீட்டுகள் தொடர்பான <<19389138>>கோரிக்கைகளில்<<>> உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால், 100 தொகுதிகளில் தவாக வேட்பாளர்களை தனித்து களமிறக்க வேல்முருகன் முடிவு எடுத்துள்ளார். அதேநேரம், இந்த தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
Similar News
News April 8, 2026
ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழித்தால்…

ஆண்கள் நின்றபடி சிறுநீர் கழிப்பதைவிட அமர்ந்தவாறு கழிப்பது ஆரோக்கியமானது என டாக்டர்கள் கூறுகின்றனர். நின்றவாறு சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதும் காலியாகாமல், மீதமுள்ள சிறுநீரால் பிறப்புறுப்பில் பாக்டீரியா வளர வாய்ப்புள்ளது. அமர்ந்து சிறுநீர் கழிக்கும்போது சிறுநீர்ப்பை முழுவதும் காலியாகி தொற்று ஏற்படும் ஆபத்து குறையுமாம். சிறுநீர் தொற்றுள்ளவர்கள் அமர்ந்து கழித்தால் நல்லது என்கின்றனர்.
News April 8, 2026
இவர்களுக்கெல்லாம் மாற்றுதான் தவெக: விஜய்

நான் கட்சி ஆரம்பிச்சிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போகல; ஒவ்வொருத்தர் வீட்டுக்கும் போய்ட்டுதான் கட்சியே ஆரம்பிச்சேன் என்று பரப்புரையில் பன்ச்சாக விஜய் பேசியுள்ளார். மேலும், காமராஜர், அண்ணாதுரை, MGR போன்று யாரும் வர மாட்டார்களா என நீங்கள் ஏங்குவது எனக்கு தெரியும். அதற்காகத்தான் தவெக வந்துள்ளது என்றும் அவர் நெல்லை பரப்புரையில் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News April 8, 2026
தமிழக தேர்தல்.. ECI முக்கிய ஆலோசனை

TN சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக CEC ஞானேஷ் குமார், அர்ச்சனா பட்நாயக் உடன் ஆலோசனை நடத்தியுள்ளார். காணொலி வாயிலாக நடந்த கூட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள், பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 15 நாள்களே உள்ள நிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவது & அவற்றை பாதுகாப்பது குறித்தும் ஞானேஷ் குமார் கேட்டறிந்திருக்கிறார்.


