News January 5, 2026
BREAKING: திமுக அமைச்சருக்கு அதிர்ச்சி

ED நோட்டீஸை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி (IP) தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2006-11 வரை அமைச்சராக பதவி வகித்தபோது வருமானத்திற்கு அதிகமாக ₹2 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக IP மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டும், சொத்து முடக்கம் தொடர்பாகவும் ED நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட், ED-ஐ அணுக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 9, 2026
அதிமுகவில் இணைந்தார்.. இரவில் நடந்த திருப்பம்

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான வினுபாலன் தலைமையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 250 குடும்பத்தினர் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அதேபோல், நன்னிலம் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த 200 இஸ்லாமிய குடும்பத்தினரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
News February 9, 2026
CINEMA 360°: மீண்டும் கமலுடன் இணையும் SK!

*ஜீவாவின்‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் வரும் 12-ம் தேதி Netflix OTT-ல் வெளியாக உள்ளது *இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித் புதிய படத்தில் நடிக்கலாம் என தகவல் வெளிவந்துள்ளது *‘அமரன்’ பட வெற்றிக்கு பிறகு, கமலின் RKFI தயாரிப்பில் மீண்டும் SK புதிய படத்தில் நடிக்கிறார் என கூறப்படுகிறது * பெரும் வெற்றி பெற்ற ‘ஆவேசம்’ படத்தின் பார்ட் 2-ன் முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
News February 9, 2026
செங்கோட்டையன் ஒரு செல்லாத நோட்டு: EPS

செங்கோட்டையன் செல்லாத நோட்டாக மாறிவிட்டார் என EPS காட்டமாக விமர்சித்துள்ளார். செல்லாத நோட்டுக்கு என்ன மதிப்பு இருக்கிறதோ, அதே மதிப்பு தான் KAS-க்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, NDA கூட்டணியில் இருக்கும் 10 கட்சிகளில் ஒன்றுதான் அதிமுக என்றும், தற்போது இருக்கும் அதிமுக ஒரு கட்சியே இல்லை என்றும் செங்கோட்டையன் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


