News December 11, 2025
BREAKING: திமுகவில் இணைந்த விஜய்யின் முன்னாள் மேனேஜர்

தயாரிப்பாளரும், விஜய்யின் முன்னாள் மேனேஜருமான பி.டி.செல்வகுமார், ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் சேர்ந்து 100-க்கும் மேற்பட்டோரும் திமுகவில் ஐக்கியமாகியுள்ளனர். விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்தை தயாரித்த அவர், ‘ஒன்பதுல குரு’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். நீண்டகாலமாக நண்பர்களாக இருந்த விஜய்- செல்வக்குமாருக்கு இடையே மோதல் ஏற்பட்டதால், இருவரும் பிரிந்ததாக கூறப்படுகிறது.
Similar News
News March 3, 2026
இந்தியாவில் X ஆபாச வீடியோ பார்க்க முடியாது

X தளத்தில் ஆபாச பதிவுகளை பதிவிட கட்டுப்பாடுகளை விதிக்க, சமீபத்தில் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி இந்தியாவில் ஆபாச வீடியோக்கள், போட்டோக்கள் இனி X தளத்தில் இடம்பெறாது என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்தே ஆட்சேபனைக்குரிய வீடியோக்கள் தடை செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம், வெளிநாடுகளுக்கு இந்த தடை பொருந்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
News March 3, 2026
விபத்தில் சிக்கிய தமிழ் நடிகை.. உருக்கமான PHOTO

நடிகை தேவிப் பிரியா <<19278785>>கார் விபத்தில்<<>> சிக்கியதில் அவருடைய டிரைவர் முத்து உயிரிழந்தார். 15 ஆண்டுகளாக தன்னை கவனித்து வந்த முத்துவின் இழப்பை தாங்க முடியவில்லை என அவர் கண்ணீர்மல்க தெரிவித்திருந்தார். இந்நிலையில், முத்துவின் படத்தை SM-ல் பதிவிட்ட அவர், ‘அன்புத் தம்பி நொடிப் பொழுதில் உயிர்பிரிந்தாய்; இனி ஒவ்வொரு நொடியும் எனக்கு நரகம்தான்’ என குறிப்பிட்டுள்ளார். மேலே ஸ்வைப் செய்து போட்டோவை பாருங்க.
News March 3, 2026
திமுகவா.. அதிமுகவா? கிருஷ்ணசாமி ஆலோசனை

2026 தேர்தல் தொடர்பாக மார்ச் 5-ம் தேதியன்று புதிய தமிழகம் கட்சி ஆலோசனை நடத்தவுள்ளது. 10+1 சீட்களை அதிமுக கூட்டணியில் கேட்டுள்ளதால் இழுபறி நீடிக்கிறதாம். அதேநேரம், திமுகவுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 + 1 என திமுக ஆஃபர் அளிப்பதாகவும், இதுகுறித்தே மார்ச் 5-ல் ஆலோசனை நடைபெறலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. உங்கள் கருத்து என்ன?


