News February 27, 2026

BREAKING: திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

image

மூன்று முறை முதல்வர் பதவி வகித்த ஓபிஎஸ் 2022ல் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஏற்பட்ட மோதலால் அதிமுகவில் இருந்து விலக்கப்பட்டார். அதன்பின் அதிமுக தொண்டர்கள் மீட்புக் குழு என்று தனிப்பயணம் மேற்கொண்ட அவர் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது மகனும் முன்னாள் எம்.பியுமான ரவீந்திரநாத் மற்றும் ஆதரவாளர்களுடன் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

Similar News

News February 27, 2026

தேனி: தளபதி வாய்ப்பு தந்தால் தேர்தலில் போட்டி – ஓபிஎஸ்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தனது MLA பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். பின் செய்தியாளர்களின் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு வரும் சட்டமன்ற தேர்தலில் தளபதி வாய்ப்பு தந்தால் தேர்தலில் தான் உறுதியாக போட்டியிடுவேன் என்றார். மேலும், திமுகவில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பதாக தெரிவித்தார்.

News February 27, 2026

BREAKING: MLA பதவியை ராஜினாமா செய்தார் ஓபிஎஸ்

image

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். அதன்பின் தலைமை செயலகத்தில் சட்டமன்ற செயலரை சந்தித்து போடிநாயக்கனூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை ஓபிஎஸ் ராஜினாமா செய்தார். அதிமுக சார்பில் 2006 பெரியகுளம் தொகுதி, 2011, 2016 & 2021 ல் போடி தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

News February 27, 2026

தேனி: NO EXAM… ரூ.63,000 சம்பளத்தில் வங்கி வேலை

image

South Indian வங்கியில் Junior Officer பணிக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி முடித்த 18 – 30 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.63,000 வழங்கப்படும். தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 2ம் தேதிக்குள் <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!