News January 2, 2026
BREAKING: திண்டுக்கல் அருகே பயங்கர விபத்து!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அடுத்த காமலாபுரம் பிரிவு அருகே, மதுரை திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று அரசு பேருந்து – லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. மேலும், 5 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 5, 2026
திண்டுக்கல்: விரைவில் பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மதுரை மண்டல அலுவலகத்திற்கு சென்று பாஸ்போர்ட் பெற்று வந்தனர். பின்னர் கொடைரோடு தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் மையம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் மாவட்ட தலைநகருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் கொண்டுவர வேண்டும் என்று பலதரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் அலுவலகத்தில் இடம் ஒதுக்கப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது.
News February 5, 2026
வத்தலகுண்டு அருகே வசமாக சிக்கிய 3 பேர்! அதிரடி

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் சுபாஷ் (40), ஜோதி (43) மற்றும் மனோஜ் குமார் (28) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
News February 5, 2026
திண்டுக்கல்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.


