News August 31, 2025

BREAKING: திண்டுக்கல்லில் பயங்கர விபத்து!

image

திண்டுக்கல்: பட்டிவீரன்பட்டி குறுக்கு சாலை பெட்ரோல் பங்க் அருகே இன்று அதிகாலையில் கரூரில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வேனும் – பெரியகுளத்தில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சென்ற வேனும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 2 வேன்களின் முன் பகுதியும் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News September 3, 2025

திண்டுக்கலில் 108 ஆம்புலன்ஸில் வேலை வாய்ப்பு!

image

திண்டுக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் ஓட்டுநர், மெடிக்கல் டெக்னீசியன் பணிகளுக்கு வருகிற செப்டம்பர் 6ஆம் தேதி பழைய கோர்ட் அருகே உள்ள ST ஜோசப் ஸ்கூல் அருகே நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. 108 ஆம்புலன்ஸில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள், தங்களின் அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News September 3, 2025

திண்டுக்கல்: உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்; பழனி நகராட்சிக்குட்பட்ட வார்டு எண்-30 மற்றும் 31 சேவுகம்பட்டி ஊராட்சி, கொடைக்கானல் வட்டாரம், திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம், ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம் ஆகிய ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளவும்.

News September 2, 2025

திண்டுக்கல் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீடு!

image

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் இலக்கிய களம் இணைந்து நடத்துகின்ற புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் இன்று செப்-02 திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் கலந்து கொண்டு 28 புத்தகங்களை இன்று வெளியிட்டு புத்தகங்களின் எழுத்தாளர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

error: Content is protected !!