News August 20, 2025

BREAKING: திண்டுக்கல்லில் கழுத்தறுத்து கொலை!

image

திண்டுக்கல்: பழனி பெரியப்பாநகர் நகராட்சி குப்பை கிடங்கு அருகே ஓர் இளைஞர் இன்று(ஆக.20) கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தது? உள்ளிட்ட கோணங்களில் பழனி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Similar News

News August 20, 2025

கொடைக்கானலில் என்.ஐ.ஏ சோதனை

image

திண்டுக்கல்: கொடைக்கானலில் மட்டும் இன்று(ஆக.20) 5 இடங்களில் NIA சோதனை மேற்கொண்டுள்ளனர். மேலும், கொடைக்கானல் அண்ணா சாலையில் குடியிருந்து வரும் முபாரக் என்பவர் வீடு, கலையரங்கம் பகுதியில் அருகே ஆம்பூர் பிரியாணி கடை, டிப்போ பகுதியில் ஆம்பூர் பிரியாணி கடை மற்றும் பூம்பாறை, லேக் உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட NIA அலுவலர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 20, 2025

திண்டுக்கல்: மின் கட்டணத்தை விரைந்து செலுத்த கோரிக்கை

image

திண்டுக்கல் தெற்கு பொன்னகரம் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட நல்லாம்பட்டி, சிறுமலை மின் பகிர்மானங்களில் மின் கணக்கீடு பணியாளர் உடல் நலக்குறைவால் விடுப்பில் உள்ளதால் ஆகஸ்ட் மின் கணக்கீட்டு பணி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே நல்லாம்பட்டி, சிறுமலை பகிர்மானங்களில் உள்ள மின் நுகர்வோர்கள் முந்தைய மாத மின் கணக்கீட்டு தொகையை செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News August 20, 2025

திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருக்கீங்களா?

image

திண்டுக்கல்: வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.(SHARE IT)

error: Content is protected !!