News September 9, 2025
BREAKING: தர்மபுரியில் தவெக தலைவர் விஜய் பிரசாரம்!

நடிகர் விஜய், தனது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் மூலம், 2026 தேர்தலை நோக்கிப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியின் முதல் 2 மாநாடுகளை வெற்றிகரமாக முடித்த பிறகு, மாவட்ட வாரியாகப் பிரசாரங்களை மேற்கொள்ள இருக்கிறார். வரும் செப்.13-ல், திருச்சியில் தனது பிரசாரத்தைத் தொடங்கும் விஜய், அக்.18 வேலூரில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தங்கள் பகுதிக்கு வரும் தலைவர் விஜயைக் காண, தொண்டர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Similar News
News September 9, 2025
தர்மபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (செப்.09) இரவு ரோந்து செல்லும் காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தலைமை அதிகாரியாக சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் தொடர்பு கொள்வதற்கு தொடர்புஎண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News September 9, 2025
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் கல்விக்கடன் முகாம் வருகின்ற 12ம் தேதி வெள்ளிகிழமை அன்று தருமபுரி வட்டம், குண்டல்பட்டி கிராமம், கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வருவான் வடிவேலன் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற உள்ளது.
News September 9, 2025
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

தருமபுரி மாவட்டம், செட்டிக்கரை RPRS திருமண மஹாலில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ்(செப்-9) இன்று வழங்கினார். உடன் வட்டாட்சியர்கள் ராஜராஜன், சௌகத்அலி, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.