News November 23, 2025
BREAKING: தமிழகம் முழுவதும் விலை குறைந்தது

வார விடுமுறை நாளான இன்று சிக்கன் கடைகளில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கொள்முதல் பண்ணைகளில் (நாமக்கல்) கறிக்கோழி விலை Kg-க்கு ₹4 குறைந்துள்ளது. இதன்படி, கறிக்கோழி Kg (உயிருடன்) ₹94-க்கும், முட்டைக்கோழி ₹122-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மொத்த கொள்முதல் விலை குறைந்ததால், TN முழுவதும் சிக்கன் விலை குறைந்துள்ளது. அதேநேரம் முட்டை விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டி ₹6.10-க்கு விற்கப்படுகிறது.
Similar News
News November 24, 2025
சென்னையில் இது கட்டாயம்: மீறினால் ₹500 அபராதம்!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் செல்லப்பிராணி நாய்களை அழைத்து வரும்போது சங்கிலி மற்றும் வாய் கவசம் அணிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறையை மீறுபவர்களிடம் இன்று முதல் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், நாய் கடியைத் தடுக்கவும் 115 சுகாதார ஆய்வாளர்கள் மூலம் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 24, 2025
இனி 2.30 மணி நேரத்தில் சென்னை TO ஹைதராபாத்!

சென்னையில் இருந்து ஹைதராபாத்துக்கு செல்ல 12 மணி நேரமாவதால், நேர விரயம், பயண களைப்பு என தவிக்கும் மக்களுக்கு ஒரு குட் நியூஸ். இனி 2.30 மணி நேரத்தில் ஹைதராபாத் செல்லலாம் என்ற நம்ப முடிகிறதா? ஆம், சென்னை – ஹைதராபாத் இடையேயான 778 கி.மீ., புல்லட் ரயில் திட்டத்தின் அறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு TN அரசு ஒப்புதல் வழங்கினால், இம்மாத இறுதிக்குள் DPR இறுதி செய்யப்படும்.
News November 24, 2025
திமுக உடன் கூட்டணி முறிவு.. ஏன்?

சிறிய கட்சிகளை மதிக்காததால் தான் திமுக கூட்டணியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்ததாக ஃபார்வர்டு பிளாக் கதிரவன் விளக்கமளித்துள்ளார். திமுக பெரிய கட்சிகளையும் பணத்தை வைத்து அடிமைப்படுத்துவதாக கூறிய அவர், பணத்தால் எதையும் சாதிக்கலாம் என நினைக்கும் கார்ப்பரேட் கம்பெனியாக அக்கட்சி மாறிவிட்டதாக விமர்சித்துள்ளார். மேலும், 2021 தேர்தலில் கட்டாயப்படுத்தி சூரியன் சின்னத்தில் நிற்கவைத்ததாகவும் கூறியுள்ளார்.


