News December 24, 2025
BREAKING: தமிழகத்தை உலுக்கிய வழக்கில் தீர்ப்பு

நெல்லையில், 14 வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூரத் தந்தைக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மாநிலத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 7 மாதங்களில் தீர்ப்பு அளித்துள்ள நெல்லை போக்சோ கோர்ட், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு TN அரசு ₹10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பெற்ற மகளை பாதுகாக்க வேண்டிய தந்தையே அவரை சிதைப்பது சமூகத்தில் மன்னிக்க முடியாத குற்றம் என நீதிபதி கூறியுள்ளார்.
Similar News
News December 25, 2025
₹20 செலுத்தினால் ₹2 லட்சம் காப்பீடு; முந்துங்க!

பிரீமியம் கட்ட பணம் இல்லை என்பதால் விபத்து காப்பீட்டை தொடங்காமல் இருக்கீங்களா? PM சுரக்ஷா பீம யோஜனா திட்டத்தில், ஆண்டுக்கு ₹20 கட்டினால் ₹2 லட்சம் வரை காப்பீடு தொகையாக பெறலாம். காப்பீடு எடுக்கும் நபர் விபத்தில் கை, கால்களை இழந்தாலோ அல்லது இறந்தாலோ, குடும்பத்தினருக்கு இந்தப் பணம் கிடைக்கும். அருகில் உள்ள வங்கிக்கு சென்று இதற்கு விண்ணப்பியுங்கள். SHARE.
News December 25, 2025
புது ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு.. NEW UPDATE

பொங்கல் பரிசு தொகுப்பை அரசு விரைவில் அறிவிக்க உள்ள நிலையில், புதிதாக விண்ணப்பித்துள்ள சுமார் 2 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் விசாரித்தபோது, புதிய கார்டுகள் பிரிண்ட் நிலையில் உள்ளதாக கூறினர். TN அரசு பொங்கல் பரிசை அறிவிப்பதற்கு முன்னரே, புதிய கார்டுகள் ஆக்டிவ் நிலையிலிருந்தால் மட்டுமே அவர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தனர்.
News December 25, 2025
இப்படி ஒரு X-mas வாழ்த்தை கேட்டிருக்கவே மாட்டீங்க!

இத்தாலி PM மெலோனி அரசு அதிகாரிகளுக்கு கூறிய X-mas வாழ்த்து உலகளவில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த வருடம் அனைவருக்கும் மிகவும் கடினமாக இருந்ததாக கூறிய அவர், அடுத்த ஆண்டு இன்னும் மோசமாக இருக்கும் என கூறியுள்ளார். அதனால் இந்த விடுமுறை நாள்களில் நன்றாக ஓய்வெடுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளார். ஒரு பேச்சுக்காவது அடுத்த வருடம் நல்லா இருக்கும்னு சொல்லியிருக்கலாம் என நெட்டிசன்கள் குமுறுகின்றனர்.


