News November 23, 2025
BREAKING: தமிழகத்தில் காலையிலேயே துப்பாக்கிச்சூடு

சிதம்பரத்தில் போலீசாரை தாக்க முயன்றதாக கூறி கஞ்சா வியாபாரி நவீன்(25) மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காலில் காயமடைந்த நவீன் GH-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். 20 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் நேற்று நவீன் கைது செய்யப்பட்டார். காலையில், கஞ்சாவை பறிமுதல் செய்ய அழைத்துச் சென்றபோது போலீசாரை தாக்க முயன்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. <<18355280>>நேற்று சென்னையில்<<>> ஒரு ரவுடியை போலீசார் சுட்டுப்பிடித்திருந்தனர்.
Similar News
News February 13, 2026
சீட் விவகாரத்தில் இறங்கி வருகிறாரா பிரேமலதா?

2011-ல் எதிர்க்கட்சியாக இருந்த தேமுதிகவின் வாக்கு சதவீதம், அதன் பிறகு படிப்படியாக குறையத் தொடங்கியது. தொடர் தோல்வியை சந்திக்கும் தேமுதிகவை பழைய நிலைமைக்கு கொண்டு வர பிரேமலதா சீட் விவகாரத்தில் உறுதியாக இருந்தார். ஆனால், தற்போது தொகுதி எண்ணிக்கையை 14-லிருந்து 10-ஆக குறைத்து இருக்கிறாராம். அதுமட்டுமல்லாமல், போட்டியிடும் அனைத்து தொகுதியிலும் வெற்றி பெறவேண்டும் என புதிய திட்டத்தையும் வகுத்துள்ளாராம்.
News February 13, 2026
ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய திமுக

இதுவரை தொகுதிப் பங்கீட்டு குழுவை அமைக்காத திமுக தலைமை, அமைச்சர்கள் நேரு, வேலு வாயிலாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாம். இதில், முஸ்லிம் லீக், மமக, கொ.ம.தே.க., ஆகிய கட்சிகளுக்கு தலா இரு தொகுதி; வேல்முருகன், கருணாஸ் ஆகியோருக்கு தலா ஒரு தொகுதி என பேசி முடிக்கப்பட்டுவிட்டதாம். இதில், பண்ருட்டிக்கு பதிலாக நெய்வேலியை வேல்முருகன் கேட்டிருக்கிறாராம்.
News February 13, 2026
திமுகவிடம் 12 சீட் கேட்கிறாரா திருமா?

எதிர்கால அரசியல் அடையாளத்தை மையப்படுத்தி விசிகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. ஒரு கட்சி மாநில கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டும் என்றால், குறிப்பிட்ட வாக்குகளையும் தொகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும். இதனை தக்க வைத்துக் கொள்வதற்காக விசிக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. இதனால், திமுக கூட்டணியில் குறைந்தது 6 (மொத்தம் 12) தொகுதிகளில் கூடுதலாக போட்டியிட வேண்டும் என திருமா உறுதியாக இருக்கிறாராம்.


