News December 15, 2025
BREAKING: தங்கம் விலை ₹1 லட்சத்தை கடந்தது

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ₹1 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 22 கேரட் தங்கம் காலையில் 1 சவரன் ₹720 அதிகரித்த நிலையில், பிற்பகலில் மேலும் ₹440 உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது, 1 கிராம் ₹12,515-க்கும், 1 சவரன் ₹1,00,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருவது நடுத்தர மக்கள் தங்கத்தை வாங்க முடியாதோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News April 11, 2026
ஈரான் உச்ச தலைவருக்கு என்ன ஆச்சு?

ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தபா கமேனி போரில் காயமடைந்ததாக கூறப்பட்டாலும், பொதுவெளியில் இதுவரை தென்படவில்லை. இது மர்மமாக இருந்த நிலையில், அடையாளம் காண முடியாத அளவுக்கு அவருக்கு முகத்திலும், காலிலும் காயம் பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் தான் அவர் முகத்தை வெளிக்காட்டாமல், போனில் `வாய்ஸ் கால்’ வழியாக மட்டுமே அரசுக்கும் ராணுவத்துக்கும் வழிகாட்டல்களை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
News April 11, 2026
விஜய் நல்ல கணவனாக இருக்கணும்: நயினார்

திமுகவை ஜெயிக்க வைக்கவே விஜய் தனிக் கட்சி தொடங்கியிருப்பதாக நயினார் பேசியுள்ளார். விஜய் காரைக்குடியில் சைக்கிள் ஓட்டியது வேடிக்கையாக இருந்ததாக கூறிய அவர், திமுகவை ஓட்டுவதற்காக வராமல், சைக்கிள் ஓட்டுவதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறார் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், விஜய் முதலில் நல்ல குடும்பஸ்தனாகவும், கணவனாகவும் இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News April 11, 2026
BREAKING: சந்தீப் மிட்டல் விடுவிப்பு

லஞ்ச ஒழிப்புத் துறை(DVAC) டிஜிபி பொறுப்பிலிருந்து சந்தீப் மிட்டல் விடுவிக்கப்படுவதாக ECI அறிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஆயுதப்படை டிஜிபி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டார். இதனிடையே, RSS, பாஜகவின் ஆதரவாளராக இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறையிலிருந்து அவரை நீக்க வேண்டும் என திமுகவின் TR பாலு, ECI-க்கு வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.


