News January 23, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு

நேற்று குறைந்த தங்கத்தின் விலை இன்று (ஜன.23) மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹450 அதிகரித்து ₹14,650-க்கும், சவரனுக்கு ₹3,600 அதிகரித்து ₹1,17,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவதால், வரும் நாள்களிலும் விலை உயரும் என கூறப்படுகிறது.
Similar News
News January 28, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 28, 2026
25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்பு: முர்மு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல்நாள் நிகழ்வில் மத்திய அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசியுள்ளார் முர்மு. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 11 கோடிக்கும் அதிகமானோர், இலவச மருத்துவ சிகிச்சையை பெற்றிருப்பதாக கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார். மேலும், 10 வருடங்களில் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
News January 28, 2026
SI தேர்வுக்கான முடிவுகள் வெளியீடு

கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி நடைபெற்ற SI பணிக்கான எழுத்து தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 1,299 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை 1,78,000 பேர் எழுதினர். இதில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பிப்.24 – மார்ச் 2-ம் தேதிவரை உடல் தகுதித்தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள <


