News January 21, 2026
BREAKING: தங்கம் விலை வரலாறு காணாத மாற்றம்

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ₹3,600 வரை அதிகரித்து ஷாக் கொடுத்த நிலையில், இன்றும் விலை அதிகரித்து வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹350 அதிகரித்து ₹14,250-க்கும், சவரனுக்கு ₹2,800 உயர்ந்து ₹1,14,000-க்கும் விற்பனையாகிறது. இந்த 2 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 அதிகரித்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News January 31, 2026
வெறும் வயிற்றில் இந்த 5 பழங்களைச் சாப்பிடுங்க!

நம்மை நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள காலை உணவு என்பது மிக முக்கியமானது. அதிலும் சில குறிப்பிட பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றி, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றன. மேலும் செரிமானத்திற்கு வழி வகுக்கும். அந்த 5 பழங்கள் எவை என்பதை தெரிந்துகொள்ள வலதுபக்கம் SWipe செய்து பாருங்க.
News January 31, 2026
மூத்த குடிமக்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நிறுத்தப்பட்ட மூத்த குடிமக்களுக்கான ரயில் கட்டண சலுகைகளை மீண்டும் வழங்குவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சலுகை குறித்து நிதி & ரயில்வே அமைச்சகங்கள் ஆலோசித்து வருவதாகவும், நாளை தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.
News January 31, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 31, தை 17 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர்.


