News January 21, 2026

BREAKING: தங்கம் விலை மீண்டும் மிகப்பெரிய மாற்றம்

image

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம் பெற்று, 22 கேரட் 1 கிராம் தங்கம் மீண்டும் ₹165 உயர்ந்து ₹14,415-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலையில் சவரனுக்கு ₹2,800 உயர்ந்த நிலையில், மதியம் ₹1,320 அதிகரித்து ₹1,15,320-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரே நாளில் 3 மணி நேர இடைவெளியில் சவரனுக்கு ₹4,120 உயர்ந்துள்ளதால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 28, 2026

படிக்காதவர்களுக்கும் அரசு வேலை: சீமான்

image

நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் படிக்காதவருக்கும் அரசு வேலை வழங்கப்படும் என்று சீமான் கூறியுள்ளார். திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரத்தின்போது, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் வேலைவாய்ப்பு & வருவாயை உயர்த்துவதாக தெரிவித்தார். நிலமும் வளமும் சார்ந்த தொழிற்சாலைகளை கொண்டுவந்து அனைவருக்கும் அரசு வேலை தருவோம் என்று கூறினார். மேலும், படிக்காதவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றார். <<-se>>#TNELECTION2026<<>>

News March 28, 2026

தவெகவுடன் கூட்டணி.. முடிவை கூறினார்

image

அதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இந்நிலையில் NDA-க்கும் தங்களுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், தவெக அணுகினால் அவர்களுடனான கூட்டணி குறித்து சிந்திப்போம் எனவும் அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார். மேலும், தென் தமிழகத்தில் 50-60 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் கூட பெறாது என்றும் தெரிவித்தார்.

News March 28, 2026

பொன்ராஜ் பேசியது தவறில்லை: சீமான்

image

தவெகவை ஆதரிக்கும் மகளிர் குறித்து ஆபாசமாக பேசிய அரசியல் விமர்சகர் பொன்ராஜ் மீது<<19485483>>விஜய் <<>>நேற்று கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் பொன்ராஜ் பேசியது தவறில்லை என்றும், அது ஆதங்கத்தின் வெளிப்பாடு எனவும் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் பெண்கள் மத்தியில் தனக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை மறைக்க, விஜய் புகார் அளித்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!