News December 29, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

Similar News

News January 2, 2026

ODI இனி என்னாகும்னு தெரியல: அஸ்வின் கவலை

image

டெஸ்ட், டி20 போட்டிகள் போலவே, போதுமான அளவில் ஒருநாள் போட்டிகளுக்கும் ICC முக்கியத்துவம் தர வேண்டும் என அஸ்வின் கூறியுள்ளார். விஜய் ஹசாரே போட்டியில் விராட், ரோஹித் இருந்ததாலேயே மக்கள் பார்த்ததாகவும், அவர்கள் ஓய்வு பெற்றால் என்னவாகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். 2027 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு, ஒருநாள் போட்டிகளின் நிலைமை எப்படி இருக்கும் என்பதே தெரியவில்லை என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

News January 2, 2026

BREAKING: சண்டை வெடித்தது.. தமிழக அரசியலில் பரபரப்பு

image

தமிழக காங்.,ல் வெளிப்படையாகவே சண்டை வெடித்துள்ளது. அரசின் கடன் பற்றி காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியதை அடுத்து தமிழக காங்.,ல் பனிப்போர் நிலவுகிறது. இந்நிலையில், ஒரு சிலரின் சுயநலத்திற்காக தமிழக காங்., கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஜோதிமணி MP தெரிவித்துள்ளார். எவ்வித கட்டுப்பாடுமற்று தொடரும் உட்கட்சி பிரச்னைகள் மனச்சோர்வை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News January 2, 2026

அமித்ஷாவுக்கு அவசர கடிதம் எழுதிய நயினார்

image

2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கான ஆண்டாக அமையும் என நயினார் தெரிவித்துள்ளார். நெல்லையில் பேசிய அவர், TN-ல் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு குறித்து உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். மேலும், TN-ல் பாலியல் வன்கொடுமைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தி.மலையில் ஒரே வாரத்தில் வட மாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட 2 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!