News December 19, 2025
BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

சர்வதேச சந்தையில் கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் இருந்த தங்கம் இன்று(டிச.19) 1 அவுன்ஸ்(28g) $11.30 குறைந்து $4,330 ஆக உள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் 1 அவுன்ஸ்-க்கு $1.06 குறைந்து $65.54-க்கு விற்பனையாகிறது. இதன் தாக்கத்தால் இந்திய சந்தையில் உயர்ந்து வந்த தங்கத்தின் விலை(தற்போது சவரன் ₹99,520) இன்று கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
Similar News
News December 24, 2025
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் ரஷ்யா!

2036-ம் ஆண்டுக்குள் நிலவில் அணுமின் நிலையத்தை கட்டமைக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. நிலவில் நீண்டகால ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கும், ரஷ்யா – சீனா கூட்டு ஆய்வு மையத்தை நிறுவுவதற்கும் தேவைப்படும் மின்சாரத்தை, அங்கு அமைக்கும் அணுமின் நிலையத்தில் இருந்து உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. விண்வெளி ஆய்வில் US-ஐ விட ரஷ்யா பின்தங்கி வரும் நிலையில், இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
News December 24, 2025
4 குழந்தைகள் பெற வேண்டும்: பாஜக MP நவ்நீத் ராணா

இந்துக்களாகிய நாம் குறைந்தது 3-4 குழந்தைகளாவது பெற்றுக்கொள்ள வேண்டும் என பாஜக MP நவ்நீத் ராணா கூறியுள்ளார். சமீபத்தில் ஒரு மௌலானா தனக்கு 4 மனைவிகள், 19 குழந்தைகள் இருப்பதாக ஓப்பனாக பேசினார். அதிக குழந்தைகள் பெற்றெடுப்பதன் மூலம் அவர்கள் இந்தியாவை பாகிஸ்தானாக மாற்ற திட்டமிட்டுள்ளனர். அப்படியென்றால் இந்துக்களாகிய நாம் ஏன் ஒரே குழந்தையுடன் திருப்தி அடைய வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார்.
News December 24, 2025
‘அம்மா SORRY.. நான் சாகப்போறேன்’

‘அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் பணத்தை வீணாக்க விரும்பவில்லை. என் சாவுக்கு நான் மட்டுமே பொறுப்பு’. நொய்டாவில் விடுதியில் தங்கி இன்ஜினியரிங் படித்துவந்த ஆகாஷ் தீப்பின் கடைசி வரிகள் இவை. சரியாக படிப்பு வரவில்லை என மன உளைச்சலில் இருந்த அவர், அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகனை இழந்த பெற்றோரை என்ன சொல்லி தேற்றுவது? தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்பதை உணருங்கள்!


