News November 18, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

தங்கம் விலை இன்று(நவ.18) சவரனுக்கு ₹1,120 குறைந்துள்ளது. 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் நம்மூரிலும் கடந்த 4 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹4,000 விலை குறைந்துள்ளது. இதனால், நடுத்தர மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Similar News

News November 18, 2025

பிஹாரில் எந்த கட்சிக்கு எத்தனை அமைச்சர்கள்?

image

பிஹாரில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் அதிகளவில் பாஜகவினர் இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாஜகவை சேர்ந்த 16 பேருக்கு, JDU-வை சேர்ந்த 14 பேருக்கு, சிராஜ் பாஸ்வான் கட்சியை சேர்ந்த 3 பேருக்கு அமைச்சரவையில் இடமளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சிய கூட்டணிகளான அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது.

BREAKING: திமுகவில் விலகி அதிமுகவில் இணைந்தனர்

image

மாற்றுக்கட்சியினரை இணைக்கும் பணியை திமுகவும், அதிமுகவும் தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த வாரம் அதிமுகவில் இருந்து விலகி அடுத்தடுத்து திமுகவில் இணைந்தனர். இதற்கு பதிலடியாக அதிமுகவும் தற்போது களத்தில் இறங்கியுள்ளது. இன்று திமுகவின் விருதுநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் அருண்குமார் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளனர்.

error: Content is protected !!